உள்நாடு

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

(UTV | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (29) இடம்பெற்ற கொவிட் – 19 ஒழிப்பு செயலணியின் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளவுள்ளதாக இன்றைய கூட்டத்தின் போது சுகாதார அதிகாரிகள் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.

 

Related posts

ரவி உள்ளிட்டோரை கைது செய்ய இடைக்காலத் தடை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி

VAT மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதாக்களுக்கான 10 மனுக்கள்