உள்நாடு

‘ஒரு நாடு, ஒரே சட்டம்’ : முதல் முறையாக கூடுகிறது

(UTV | கொழும்பு) – ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி இன்று முதல் தடவையாக கூடுகிறது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு நாடு ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அதற்கான சட்டமூலங்களை தயாரிப்பதே இந்த செயலணியின் பணியாகும்.

கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி கடந்த 27ம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிப்பு

பல பகுதிகளில் நீர் வெட்டு