உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

(UTV | கொழும்பு) –  தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு வட மாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நியமிக்க நாடாளுமன்ற பேரவை அனுமதியளித்துள்ளது.

அத்துடன் வி.சிவஞானசோதியின் மறைவை அடுத்து பொதுச் சேவைகள் ஆணைக்குவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக சுந்தரம் அருமைநாயகத்தை நியமிப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தரம் அருமைநாயகம் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகக் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!

சலுகை இல்லை என்றால் பேருந்து கட்டணம் 30% அதிகரிக்கும்

உண்மைகளை மக்களிடம் மறைப்பது சிக்கலில் தள்ளும் விடயம் – சஜித் பிரேமதாச

editor