விளையாட்டு

ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

(UTV | அவுஸ்ரேலியா) –  குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வர்ணனையாளராக தற்போது செயற்பட்டுவரும் 51 வயதான மைக்கேல் ஸ்லேட்டர் இன்று புதன்கிழமை சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம்தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.

1993 முதல் 2001 வரை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த மைக்கேல் ஸ்லேட்டர் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Related posts

இலங்கை மற்றும் இங்கிலாந்து -2ம் நாள் ஆட்டம் இன்று

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நான்காவது போட்டி இன்று

இங்கிலாந்தை சுழற்றிய எம்புல்தெனிய