உள்நாடு

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 1000 இலிருந்து 1500ஆக அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 10 நாள் காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதோடு, ஒரு நாள் சேவையின் கீழ் 12,158 பேரும் பிராந்திய அலுவலகங்களில் 10,145 பேரும் விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

    

Related posts

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ

editor

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

விசா பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணியிடம் போலந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

editor