உள்நாடு

UPDATE – ராகலை தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட ஐவர் பலி

(UTV |  நுவரெலியா) – ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை தோட்டம் – முதலாம் பிரிவில் பதிவான தீ சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 60 வயதான ஆண் ஒருவர், 55 மற்றும் 32 வயதான இரண்டு பெண்கள், 11 மற்றும் ஒரு வயதான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் உயர்தர பிரிவிற்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.

editor

அமைச்சர் குமார ஜயக்கொடி மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

மூன்று ஊர்கள் முடக்கம்