உள்நாடு

தனியார் துறையினருக்கான ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டபூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

55 வயதை நிறைவு செய்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 57ஆகவும், 52 வயதுக்கு கீழ் உள்ள ஊழியர்களுக்கு 60 வயதாகவும் இந்த சட்டம் முன்மொழியப்படவுள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதிய வயது முன்பு 55ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வாகன இலக்கத்தகடுகள் வழங்கும் பணியில் தாமதம் – காரணத்தை விளக்கிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்த போராட்டம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்