உள்நாடு

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – சுகாதார பணியாளர்கள் எதிர்வரும் 08ஆம் திகதி மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்திருப்பதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தினா் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளனர்.

கோரிக்கைகளை முன்வைக்க குறைந்தது கலந்துரையாடலுக்கான வாய்ப்பைக் கூட வழங்காமையினால் எதிர்வரும் 08ஆம் திகதி நாள் முழுவதும் சேவையில் ஈடுபடாமிலிருக்க தீர்மானித்துள்ளதாகவும், அன்றைய தினம் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

Related posts

25 வயதுடைய ஜோர்தான் நாட்டு பெண் கடலில் மூழ்கி பலி

editor

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

முதல் Green Super Supermarket இலங்கையில்