உள்நாடு

பால்மா விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று

(UTV | கொழும்பு) –   இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பான யோசனை இன்று (04) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பால் மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனடிப்படையில், பால் மாவின் விலையை திருத்தம் செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதுடன் இன்றைய தினம் அமைச்சரவையில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு!

கம்பஹா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை இழந்தது, யாழ் ஒன்றினை பெற்றது

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா