உள்நாடு

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலான வர்த்தமானி

(UTV | கொழும்பு) – காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அவை காலாவதியான திகதியிலிருந்து மேலும் ஒருவருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.

editor