விளையாட்டு

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் லங்கா ப்ரீமியர் லீக் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில் லங்கா ப்ரீமியர் லீக் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி முதற்கட்டமாக 25 சதவீத ரசிகர்களை விளையாட்டரங்கில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதுவும் தடுப்பூசி செலுத்திய ரசிகர்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஆனால் தற்போது வரையில் இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

Related posts

5000 ஓட்டங்களுடன் 09 வது இடத்தைப் பிடித்த மெத்திவ்ஸ்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் சங்கக்கார

ஸ்மித், வோனர் இருவருக்கும் 1 வருட போட்டித்தடை