உள்நாடு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா? : தீர்மானம் இன்று

(UTV | கொழும்பு) –   எதிர்வரும் 21 ஆம் திகதி நாட்டை திறப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று(17) இடம்பெறவுள்ள கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயலணியின் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிக்குமாறு இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் கோரியுள்ளது.

இலங்கை தொடர்ந்தும், கொவிட்-19 அதிக அபாயம் உள்ள, அதாவது சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவப்பு வலயத்திலிருந்து பச்சை வலயமாக மாற்றுவது எமது இலக்காக வேண்டும் என விசேட வைத்தியர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டத்தில், பாடசாலைகளை மீளத் திறத்தல் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்படும் மாணவர்களின் வயதெல்லை குறித்தும் இதன்போது இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குணமடைந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

editor

அதிவேக நெடுஞ்சாலையில் வேனின் டயர் வெடித்ததால் விபத்து – இருவர் பலி – 4 பேர் காயம்

editor