உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரானார் கப்ரால்

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி ஆளுநராக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதி இன்று (15) வழங்கி வைத்தார்.

மத்திய வங்கி ஆளுநராகவிருந்த W.D.லக்‌ஷ்மன் பதவி விலகியதை அடுத்து, கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கப்ரால் 9 ஆண்டுகள் மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது புதிய ஆளுநராக இன்று பதவியேற்றுள்ளார்.

Related posts

சிறைச்சாலை கைதிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில் பயிற்சி

அரச வாகனங்களை செப்பனிட்டு பயன்படுத்த அனுமதி

நாளை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்