உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் பறிமுதல்

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர் முதல் இதுவரை 60,288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த 1,128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

   

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் அடையாளம்

10 கிலோ கிராம் நாட்டரிசியை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

‘இந்த அரசியல் எனக்கு பிடிக்கவில்லை’