உள்நாடு

மேலும் ஒரு தொகை சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கமைய, குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு இதுவரையில் 13.98 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

    

Related posts

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கு பூட்டு [UPDATE]

நாளை இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதல்: அறிக்கையை ஆய்வு செய்யும் குழுவில் ஷானி!

Shafnee Ahamed