உள்நாடு

இன்று முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நபர்களுக்காக 2000 ரூபா நிவாரண கொடுப்பனவு இன்றுடன் ஆரம்பமாகும் வாரத்தில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டது.

அதற்கமைய, அரசாங்கத்தினால் வழங்கப்படும் எந்தவொரு கொடுப்பனவும் இதுவரை பெறாத குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதற்காக தகுதி பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், சமூர்த்தி, முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர் விசேட தேவையுடையோர் ஆகிய அரசாங்க கொடுப்பனவுகளை பெறுவோருக்கு இந்த நிவாரணம் வழங்கப்படமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நிவாரண கொடுப்பனவை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

editor

இம்முறையும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க மறுப்பு

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!