உள்நாடுவணிகம்

மீண்டும் பால்மா விலையை அதிகரிக்க கோரிக்கை

(UTV | கொழும்பு) – ஒரு கிலோவுக்கு குறைந்தது 260 ரூபாய் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என பால்மா இறக்குமதியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்னதாக, அவர்கள் ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் விலை உயர்வை நாடினர்.

மேலும், இறக்குமதியாளர்கள் சுங்க வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முன்வந்ததை வரவேற்றனர்.

இருப்பினும், வரி விலக்கின் தாக்கம் ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் மட்டுமே இலாபம் இருக்கும் என ஒரு தொழில்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலக சந்தையில், ஒரு டன் பால்மா விலை 4,300 அமெரிக்க டொலராக இருந்தது. இப்போது 3,800 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

இதனால் உள்ளூர் சந்தையில் எங்களால் இலாபம் ஈட்ட முடியாது.

வரிச்சலுகையை தள்ளுபடி செய்வதன் மூலமும், உலகச் சந்தையில் விலை வீழ்ச்சியின் மூலமும், பால்மா விலையை இன்னும் 260 ரூபாய் உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

COVID-19 நிவாரண செயற்பாடுகளுக்கு INSEE சங்ஸ்தா சீமெந்து பங்களிப்பு

குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது

editor

அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசு தீர்மானம்