உள்நாடு

இன்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள்

(UTV | கொழும்பு) – இலங்கை பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபை இணைந்து நடத்தும் கொவிட் தடுப்பூசி செலுத்தல் வேலைத்திட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு முகத்துவாரம் மிஹிஜய செவன சனசமூக நிலையத்திலுள்ள தடுப்பூசி செலுத்தும் நிலையத்திலும், தெமட்டகொட வித்யாலங்கார பிரிவெனாவிலும் இன்று (13) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொழும்பு மாநகரசபை அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த தடுப்பூசி செலுத்தல் மையங்களில் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளமுடியும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து சபைகளிலும் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோம் – ரிஷாட் எம்.பி

editor

எல்ல-வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

editor

மன்னாரில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே ஒருவர் பலி – மூவர் காயம்

editor