கிசு கிசு

பாலியல் ரீதியிலான இணையத்தளங்கள் அனைத்தும் முடக்கம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்குள் செயற்படுகின்ற அனைத்து பாலியல் ரீதியிலான இணையத்தளங்களையும் முடக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிற்கு கொழும்பு மேலதிக நீதவான் லோஷனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல், இவ்வாறான இணையத்தளங்களுக்கான பெயர்களை பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் சேவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஆணைக்குழுவிற்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்கிஸ்ஸை பகுதியில் 15 வயதான சிறுமி, இணைய வழியாக பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற போதே, கொழும்பு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

சூப்பர் ஸ்டார் எல்லாம் சும்மா, லேடி சூப்பர் ஸ்டார் தான் கெத்து

புஷ்பராஜூக்கு 10 இலட்சம் ரூபாய் பரிசு: அமைச்சர் சஜித்

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அன்டோனியோ குட்டேரஸ் ஜனாதிபதியிடம் கோரிக்கை