வகைப்படுத்தப்படாத

மத்திய மாகாண அமைச்சராக திலின பண்டார தென்னகோன்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாண சபை உறுப்பினரான திலின பண்டார தென்னகோன்  மத்திய மாகாண அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இதற்கான நியமனக் கடிதம் திலின பண்டார தென்னகோனிற்கு வழங்கப்பட்டது.

மத்திய மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், மகளிர் விவகாரங்கள், கிராம அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்த்துறை தொடர்பான அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்த பிரமித்த பண்டார தென்னகோனிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க ஆகியோரும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related posts

48 ஆடுகளை ஏற்றிச்சென்ற மூன்று பேர் கைது

இன்று காலை 9 மணிமுதல் 12 மணிநேர நீர்வெட்டு!!

Australian High Commissioner calls on Raghavan