உள்நாடு

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டின் சில பிரதேசங்கள் இன்று (20) காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள யட்டிவாவல கிராம சேவகர் பிரிவின் சாகரதெனிய வத்தை விடுவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவின் குடா வஸ்கடுவ மேற்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நிழல் உலக தாதா’வின் விசாரணைகளில் துரிதம்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா

கிழக்கு மாகாண ஆளுநரினால் காணி அனுமதிப்பத்திரங்கள் பொது மக்களிடம் கையளிப்பு!