உள்நாடு

கொழும்பு துறைமுகத்தினுள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீன பிரஜை உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துறைமுக நகரத்துக்கும் கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு மனிதவளத்தை வழங்கும் நிறுவனத்தின் உரிமையாளரான சீன பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப்பத்திரம் இன்றி, குறித்த நபர்களை துறைமுகத்துக்குள் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், கரையோர பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட விமானப் பயணிகளுக்கு விசேட சலுகை

மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது – உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

editor

சுயேச்சை கட்சி ஒன்றியத்தின் ‘பதில் கூட்டணி’ இன்று உதயமாகிறது