உள்நாடு

நாட்டில் மீண்டும் வலுக்கும் கொரோனா பலிகள்

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் மேலும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 277,519 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 253,014 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு குறித்து உயர் மட்ட கூட்டம்

editor

அவசர தேவைகளை தீர்ப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

கடந்த 24 மணி நேரத்தில் 325 தொற்றாளர்கள் : மூன்று மரணங்கள்