உள்நாடு

பதினெட்டு வயதுக்கு கீழ் கொவிட் தடுப்பூசி செலுத்த ஆலோசனை

(UTV | கொழும்பு) – பதினெட்டு வயதுக்குக் குறைந்த சிறார்களுக்கும் கொவிட் 19 தடுப்பூசிகளைச் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பான பரிந்துரைகள் எதுவும் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சினோவெக் மற்றும் பைஸர் ஆகிய தடுப்பூசிகள் சில நாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இதனை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

“அரசின் IMF கலந்துரையாடலில் எனக்கு கவலையில்லை” – விமல்

கல்வி அமைச்சரின் நம்பிக்கை

புதிய பாராளுமன்றம் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது