விளையாட்டு

தட்டிச் சென்றார் ‘ஜோகோவிச்’

(UTV |  இலண்டன்) – விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் பெர்ரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6 – 7, 6 – 4, 6 – 4, 6 – 3 என் செட் கணக்கில் பெர்ரெட்டினியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், நடாலின் சாதனையை அவர் சமன் செய்தார். நடப்பாண்டில் ஆஸ்திலேலிய ஒபன், பிரெஞ்ச் ஒபனை தொடர்ந்து விம்பிள்டனிலும் வாகைசூடினார் ஜோகோவிச்.

 

Related posts

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ்

பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து பிரபல வீரர் விலகல்

IPL 2022 : சென்னையில் ஏப்ரல் 2ம் ஆரம்பம்