உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 47,240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று (03) கம்பளையில் 112 பேரும், கண்டியில் 52 பேரும், மாத்தளையில் 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு முயற்சித்த 165 பேரும் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி

‘பண அதிகாரம் பாராளுமன்றத்திடம் வழங்கப்பட வேண்டும்’