உள்நாடு

அவசர நிலைமைகளில் ‘மொடர்னா’ வுக்கு அனுமதி

(UTV | கொழும்பு) –  அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் அவசர நிலைமைகளின் போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையால் அனுமதியளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

editor

O/L பரீட்சைக்கு தோற்றிய 88 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியை

editor

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்