உலகம்

பங்களாதேஷின் தலைநகரான டாக்கா முடங்கியது

(UTV | பங்களாதேஷ்) – பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில், கடுமையான நாடளாவிய ரீதியிலான முடக்க கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

இன்று முதல் ஏழு நாட்களுக்கு, அவசர தேவையை தவிர பங்களாதேஷில் எவரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்தியாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு காரணமாக நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளன.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பு தொடங்கிய வைரஸின் புதிய அலையை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை, 5,869 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் 108 இறப்புகள் பதிவாகின.

    

Related posts

கேரளா கடும் மழை – 15 பேர் பலி

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

editor

ஜப்பானில் பயணத் தடை