உள்நாடு

வாக்காளர் பெயர்பட்டியல் புதிய முறையின் கீழ் திருத்தம்

(UTV | கொழும்பு) –    2021ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலை புதிய முறையின் கீழ் திருத்த தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் வாக்காளர் பெயர்பட்டியலை திருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் கொவிட் நிலமை காரணமாக சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாக்காளர் பெயர் பட்டியலில் வசிக்கும் இடம் தொடர்பில் அவதானித்து அதில் திருத்தங்கள் இருப்பின் மாத்திரமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை எப்போது நடத்த எதிர்பார்க்கிறது? – சஜித் பிரேமதாச கேள்வி

editor

அரச அனுமதிபெற்ற வாகனத்தில் கஞ்சா மற்றும் ஹெரோயின்

தானிஸ் அலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்