உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,561 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்

editor

மூடப்பட்ட முச்சக்கர வண்டியில் 12 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – 42 வயது நபர் கைது

editor

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு பணிகளை ஆரம்பிக்க அமைச்சரவை ஒப்புதல்