உலகம்

சர்வதேசம் எதிர்பார்த்த முதல் சந்திப்பு இன்று

(UTV | கொழும்பு) –   அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புடினுக்கு இடையிலான முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த சந்திப்பு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்று வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஜனாதிபதி ஜோ பைடன் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.

Related posts

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

காசெம் சுலேமானீ கொலையினை பென்டகன் உறுதிப்படுத்தியது

இந்தியாவில் “தக்காளி காய்ச்சல்”