உள்நாடு

அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவு – சட்டமா அதிபர்

(UTV | கொழும்பு) –    முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

அசாத் சாலி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளின் போதே, சட்டமா அதிபர் திணைக்களம் இவ்வாறு அறிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய ஊடக மாநாடு தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உரிமை மீறலாகும் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நன்றி செலுத்துதல் என்ற பாடத்தை கற்பிக்கும் தைப்பொங்கல் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது ? அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வழங்கிய பதில் இதுதான்

editor

அமெரிக்க பிரதிநிதிகள் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தனர்

editor