உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,027 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,027 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 30,042 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

Aeroflot விமான விவகாரம் : விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

இலங்கையின் சகல தேவாலயங்களிலும் பலத்த பாதுகாப்பு

கொரோனா நோயாளிகள் 6 பேர் பூரண குணம்