உள்நாடு

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு புதிய நீதிபதிகள்

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பாராளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சிசிர டி ஆப்ரூ ஓய்வு பெற்றதை அடுத்து நிலவிய வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதியினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை.

சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதிபதி கே.பி பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரைக்கும் பாராளுமன்ற சபை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்களத்தின் அறிவிப்பு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல்

editor

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை