விளையாட்டு

உலக கிரிக்கெட் பட்டியலில் நுழைய ப்ரவீனுக்கும் வாய்ப்பு

(UTV | கொழும்பு) –  ICC இனால் மே மாதம் திறமையான கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் மூவர் அடங்கிய வீரர்கள் பட்டியலில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ப்ரவீன்  ஜயவிக்கிரம உள்வாங்கப்பட்டுள்ளார்.

ப்ரவீன்  தவிர்ந்த குறித்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹஸன் அலி மற்றும் பங்களாதேஷ் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளமை விசேடமாகும்.

குறித்த வீரர்கள் மூவரும் மே மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு அதில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கைகள் சமூக வலைதளங்கலான Facebook, Instagram ஆகியவை ஊடாக ரசிகர்களுக்கு வாக்களிக்க ICC கிரிக்கெட் ரசிகர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

FIFA 2018 – மெக்சிகோவின் தடையை தகர்க்கும் முனைப்பில் பிரேசில்

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

இலங்கை கிரிகெட் நிறுவனம் இன்று மீண்டும் கோப் முன்னிலையில்