உள்நாடுவணிகம்

மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பு

(UTV | கொழும்பு) – பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார மையங்களுக்கு வந்து காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கவும் கொண்டு செல்லவும் முடியும்.

மேலும் இந்நடவடிக்கையுடன் தொடர்புடைய நபர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை எதிர்வரும் ஜூன் 3,4 ஆகிய திகதிகளிலும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வலி நிவாரணி மாத்திரை உட்கொண்டால் உயிராபத்து ஏற்படலாம்

நிதி மோசடி வழக்கு : சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை எடுக்க தீர்மானம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு