உள்நாடு

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சினோபார்ம் (Sinopharm) கொவிட் தடுப்பூசிகள் ஜூன் மாத ஆரம்ப பகுதியில் இலங்கையை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்திருந்தது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த 5 இலட்சம் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடையும் எனவும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசலின் அளவில் இரட்டிப்பு

ரிஷாதின் கைதும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கண்டனங்களும்

மின்வெட்டு நேரங்கள் அதிகரிக்கப்படும் சாத்தியம்