வகைப்படுத்தப்படாத

கல்வியமைச்சின் பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளமையால், கல்வியமைச்சில் பாடசாலை நடவடிக்கைகள் பிரிவு உள்ளிட்ட ஆறு பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் இனங்காணப்பட்டமையால், இந்த ஆறு பிரிவுகளும் மூடப்பட்டுள்ளன என கல்வியமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கொரோனா ​அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட பிரதேசங்களில், கல்வியமைச்சில் கடமையாற்றும் பணியாளர்கள் பலர் உள்ளனர். இதனால், கல்வியமைச்சின் செயற்பாடுகள் பல, முடங்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

පාසැල් මලල ක්‍රීඩා උළෙල සාර්ථක කරගැනීමට සමපෝෂ සවිබලය

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு