உள்நாடு

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – நாட்டின் 7ஆவது அதிவேக வீதியான ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

கொரோனா பரவல் காரணமாக பிரதமர் அலரிமாளிகையில் இருந்து நவீன தொழில்நுட்பம் ஊடாக அந்த நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வீதியின் நிர்மாணப்பணிகள் தென் அதிவேக வீதியின் கஹதுடுவ உள்ளக இடமாறல் பகுதியில் ஆரம்பித்து இங்கிரிய – இரத்தினபுரி ஊடாக பெல்மதுளை வரை சென்றடையவுள்ளது.

இன்றைய தினம் முதற்கட்டமாக கஹதுடுவ முதல் இங்கிரிய வரையான 24.3 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட பாதை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related posts

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி அநுர உறுதி

editor

உயர்தரப் பரீட்சையை மேலும் ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி மனு தாக்கல்!!

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்

editor