உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து தற்போதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஒரே நாளில் அதிகளவானவர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக பொது இடங்களை அண்மித்த பகுதிகளில் நாடு முழுவதும் இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கை விஞ்ஞானி ஜவாஹிருக்கு அமெரிக்காவில் விருது!

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் – பொலிஸ் உத்தியோகத்தர் பலி

editor