உள்நாடு

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை அனுமதிப்பதில் சட்டரீதியான தடைகள் இல்லை என சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளருக்கு தெரிவித்துள்ளார்.

இன்னும் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களப் பொறுப்பில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அவர்களை பாராளுமன்ற அவர்வுகளில் பங்குபெற்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் விருப்பம் தெரிவித்திருந்த போதிலும் நேற்றைய தினம் அவர் சபை அமர்வுகளுக்கு அழைத்து வரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உச்சம் தொடும் மரக்கறிகளின் விலைகள்

editor

ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு!

இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தவும் – சபாநாயகர்