உள்நாடு

திருமலையில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடங்கியது

(UTV | திருகோணமலை) – திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனக்குடா காவல்துறை அதிகார பிரிவின் சீனக்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

Related posts

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!

‘ரேவதா’ மர்மமான முறையில் உயிரிழப்பு