உள்நாடு

‘இலங்கை இனவாத அரசின் சர்வாதிகாரமே ரிஷாதின் கைது’ – இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

(UTV | சென்னை) – இலங்கையில் தற்போதைய ராஜபக்ஷ தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகு, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கோடு செயல்பட்டு வருகிறது.

இனவாத இலங்கை அரசு முதலில் ஈழத்தமிழர்களை குறிவைத்து வேட்டையாடியது. இப்போது முஸ்லிம்களை குறிவைத்து, தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி வருகிறது.

சிறுபான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் பெரும்பான்மை சிங்கள இனவெறிதான், தனது நோக்கம் என்பதனை இலங்கை அரசு நிரூபித்து வருகிறது.

இதன் தொடர்ச்சிதான் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களுக்கு தடை விதிப்பது, முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பது, முஸ்லிம் தலைவர்களை கைது செய்வது என்ற இலங்கை அரசின் சமீபத்திய நடவடிக்கைகள்.

இதன் ஒரு பகுதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இலங்கை அரசு தனது இனவாத, சிறுபான்மை விரோத நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

K.K.S.M. Dhehlan Baqavi (SDPI)
தெஹ்லான் பாகவி
தேசிய துணைத்தலைவர்
SDPI கட்சி

Related posts

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறைகொள்ள வேண்டும் – தலைவர் ரிஷாட்

editor

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

கலந்துரையாடல்களில் இருந்து இன்னும் விலகவில்லை – ஐக்கிய தேசியக் கட்சி

editor