உலகம்

கனடாவும் இரத்து செய்தது

(UTV | கனடா) –  இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மற்ற நாடுகளை தொடர்ந்து கனடாவும் இந்தியா விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து இரட்டிப்படைந்த கொரோனா பரவுவதும் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுடனான விமான சேவைகளை பல்வேறு நாடுகள் ரத்து செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கனடாவும் இந்தியாவுடனான விமான சேவைகளை முற்றிலும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அடுத்த ஒரு மாத காலத்திற்கு இந்த தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor

முன்னாள் இந்தியப் பிரதமர், எச்.டி.தேவே கவுடாவின் பேரனுக்கு ஆயுள் தண்டனை!!

editor

இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல்!