உள்நாடு

கொரோனா தீவிர நிலை : அவசரமாக கோட்டா தலைமையில் கூட்டம்

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவத்திற்கும் அனுமதி வழங்காமல் இருப்பது குறித்து கருத்திற் கொள்ள உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்கள் ஓரளவு தளர்த்தப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு செயற்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். சுகாதார வழிகாட்டல்களை மக்கள் கடைப்பிடிக்காததால் மீண்டும் ஆபத்து நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

தற்போது இளம் சந்ததியினர் மத்தியிலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்துத் தோன்றியுள்ளது. நாட்டை முடக்குவதற்கு இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போதைய நிலைமை குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

‘நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய புதிய சூத்திரம்’

சுமார் 11 வருடங்களின் பின்னர் நீர் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது

கல்முனையில் – கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் கோர விபத்து | வெளியானது CCTV காட்சி

editor