உள்நாடு

மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பத்தரமுல்லை, ராஜகிரிய மற்றும் ஆமர் வீதி ஆகிய பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மேல், தென், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (23) காலை மேல் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவானதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

கல்கிஸ்ஸை சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் இடமாற்றம்

editor

பதில் நிதியமைச்சராக ஜி.எல்.பீரிஸ்