உள்நாடு

நாடளாவிய ரீதியாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு 2 வருடம் பூர்த்தியடையும் இன்று, நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்றைய தினம் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட தேவாராதனை நடைபெறவுள்ளது.

இவற்றுக்கு ஆகக்கூடிய பாதுகாப்பை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இது தொடர்பாக அனைத்து பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் தொகுதி, பொலிஸ் பிரிவின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இது தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தமிழக மீனவர்களின் படகுகள் 3-வது நாளாக ஏலம்

“இலங்கைக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை” நிமல்

புதிய மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்