உள்நாடு

கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் 905 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கடந்த 18 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி பிற்பகல் 12 மணி முதல் நேற்று (19) காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சாரதிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளில் அதிகளவானோர் போக்குவரத்து சட்டத்தை மீறி செயற்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அஜித் பிரசன்னவுக்கு பிணை

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொரோனா பலி எண்ணிக்கை 581ஆக உயர்வு