உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) – வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பொலிசாரினால் அதிவேக நெடுஞ்சாலையில் இன்றும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு விடுமுறைகளுக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் கொழும்பு திரும்புவோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிவேக வீதியில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகம் வரையிலேயே பயணிக்க முடியுமாக உள்ளதோடு, வாகனங்களுக்கு இடையில் இடைவெளி பேணப்பட வேண்டும்.

சீரற்ற வானிலை நிலவுமாயின் அப்போது அறிவிக்கப்படும் வேக அளவுகளில் பயணிக்க வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

editor

கொழும்பு பேர வாவியில் உயிரிழக்கும் பறவைகள்

editor

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்