கேளிக்கை

கமல்ஹாசனுக்கு வில்லனா விஜய்?

(UTV | சென்னை) –  கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறினார். இதனிடையே பகத் பாசிலும் இந்த படத்தில் இணைந்துள்ளதால், இதில் யார் வில்லனாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related posts

பிரபாசுடன் இணையும் அனுஷ்கா…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்